Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

சினிமா பைரஸி கும்பலை கண்டுபிடிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரீஸ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Sony LIV தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பான, ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரீஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்தொடரை வரும், ஆகஸ்ட் 19 முதல் கண்டு களிக்கலாம்..!

அருண் விஜய் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஈரம் படத்தின் இயக்குநரான அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ் மிக்க ஏவி.எம். புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தத் ‘தமிழ் ராக்கர்ஸ்’ தொடர் பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராகும். பைரஸியுடனான திரைத்துறை நடத்தி வரும் முடிவுறாத போரை இந்தத் தொடர் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த தமிழ் ராக்கர்ஸ் தொடர் ‘ருத்ரா’ என்ற காவல் துறை அதிகாரியின் சாகசத்தை காட்டுகிறது. லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகரின் மிகப் பெரிய பட்ஜெட் படம், இணைய திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்து போராடுகிறார் ருத்ரா. அதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார். அவரால் முடிந்ததா.. இல்லையா.. என்பதுதான் இந்தத் தொடரின் திரைக்கதை.

இத்தொடர் குறித்து நடிகர் அருண் விஜய் கூறுகையில், “இத்தொடர் மூலமாக இயக்குநர் அறிவழகன் மற்றும் ஏவி.எம். புரொடக்சனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இத்தொடரின் மையக் கரு தனித்தன்மை வாய்ந்தது. தற்போதைய தமிழ்த் திரைப்பட துறையின் சூழ்நிலைக்கு இது மிகவும்  பொருத்தமான ஒன்றாகும்.

பைரஸி திருட்டானது திரைப்பட துறையில் தற்போது ஒரு முடிவுறாத போராக இருந்து வருகிறது. டிஜிட்டல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் வேகமாக வளர்ந்து வரும் உலகில், இந்த வகையிலான திருட்டும் புதிய வடிவங்களை எடுத்துள்ளது.

இந்த தொடர் இந்தப் போரை, அதன் பின்னணியை அற்புதமான விவரங்களோடு சித்தரிக்கிறது. ருத்ரா போன்ற ஒரு கதாபாத்திரம் என்னைப் போன்ற நடிகர்களுக்குக் கிடைப்பது அரிது. இப்பாத்திரம் எனக்கு கிடைத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பெரும்பான்மையான மக்களிடம் இத்தொடரை கொண்டு செல்ல Sony LIV நிறுவனம் மிகப் பெரிய பாலமாகவும், பலமாகவும் இருக்கும். இத்தொடர் பற்றிய ரசிகர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்..”  என்றார்.

SonyLIV தளத்தில் இத்தொடரை வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் கண்டுகளிக்கலாம்.!

- Advertisement -

Read more

Local News