Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

பைரசி திருடர்களின் கதையைச் சொல்லும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆகஸ்ட் 19-ல் வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் உருக்கமான கதைகளுக்கு பெயர் போன சோனி லிவ் நிறுவனம், தங்களது அடுத்த தமிழ் படமாக தமிழ் ராக்கர்ஸ்’ என்னும் படத்தைத் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தினை AVM தயாரிப்பு நிறுவனம் சோனி லிவ் தளத்திற்காகத் தயாரித்துள்ளது.

மனோஜ் குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத்தின் எழுத்தில் உருவான இத்தொடரில், அருண் விஜய், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநரான அறிவழகன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

“ஒரு மிக பெரிய தயாரிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை, மக்கள் பெரிதாக எதிர்பார்க்கும் ஒரு படத்தை பைரசி சிக்கலில் இருந்து நாயகன் எவ்வாறு காப்பாற்றுகிறான்..?” என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் தளம்.

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட  இந்த தொடர், ருத்ரா’ எனும் ஒரு காவல் அதிகாரியின்  பயனம் மூலமாக திரைக்கதையை விவரிக்கிறது. இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கின்றார்.

இந்தத் தொடரில் செய்தி திருட்டு எனும் தலைப்பில் ஒரு வித்தியாசமான கதை தளத்தின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் திரைக்கதையை அமைத்துள்ளனர்.

உலகளவில் கலையுலகில் சட்ட விரோதமான செய்தி திருட்டு என்பது மிகப் பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகைய பெரும் செய்தி திருட்டு செய்யும்  இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றை கலை உலகத்தினர் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றனர்.

முதல்முறையாக ஒரு மிக பெரிய ஆராய்ச்சியையும், தேடுதல் வேட்டையையும் நடத்தி, உண்மையை அறிந்து கொண்டு, இந்த சதி வலையில் இருக்கும்  மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்விதமாக இத்தொடரில் வெளிப்படுத்துகிறார்கள்.  

இந்த தமிழ் ராக்கர்ஸ்’ படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் தி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏவி.எம்.புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் பேசும்போது, “இந்த தமிழ் ராக்கர்ஸ்’ ஒரு நல்ல ஆழமான கதைக் களத்தைக் கொண்டது. மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்களை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டியுள்ளனர்.

சோனி லிவ் நிறுவனத்தினை எங்களது பங்குதாரராக கொண்டது எங்களது பலத்தினை மேலும் கூட்டியிள்ளது. மேலும், தொலை நோக்கு சிந்தனையுள்ள இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் இருவரும் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டுமில்லாமல், மக்களுடன் ஒரு உணர்வுபூர்வமான ஒரு பந்தத்தினையும் எங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.” என்றார்.

படத்தின் இயக்குநரான அறிவழகன் பேசும்போது, “பைரசி’, ‘ஹால் காபி’, ‘டோரன்ட் டவுன்லோட்’ போன்ற வார்த்தைகள் என்னதான் கேள்விப்பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் மற்றைய உலகிற்கு தெரியாது.

தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இந்த சுவாரஸ்மான திரில்லரில் நாயகன் அருண் விஜய் தனது ருத்ரா’ எனும் கதாபாத்திரத்தின் மூலம் மக்களை பைரசி உலகத்தின் மர்மமான வாசல்களுக்கு அழைத்து செல்கிறார்..” என்றார்.

நடிகர் அருண் விஜய் பேசும்போது, “இந்தத் தொடரின் ஒரு பகுதியாக நானும் இருந்தது எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராகவே நான இதனை பார்க்கிறேன்.

திரைத்துறையில்  அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

செய்தி திருட்டு என்பது காலம்காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தத் தொடர், திரையுலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும்.

எனது கதாபாத்திரமான ருத்ரா’ என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதுதான் கதை. எனவே, நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்தில் காண்பதற்கு காத்திருக்கின்றேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News