1977ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி, ரஜினி உள்ளிட்டோர் நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் பதினாறு வயதினிலே. இளையராஜாவின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன.
ஆனால் இதில் புகழ் பெற்ற, ‘செந்தூரப்பூவே..’ பாடலை எழுதியது யார் என்று பலருக்கும் தெரியாது.
அவர்.. கங்கை அமரன்.
இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் ஒரு அற்புதமான பாடலாசிரியரும்கூட.
இந்தப் பாடல்தான் திரையில் அவர் எழுதிய முதல் பாடல்.இது குறித்து, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், “செந்தூரப்பூ என்று ஒரு பூ, தமிழ்நாட்டில் கிடையாது. அதனால் இலக்கியங்களிலோ, புராணங்களிலோ இந்த பெயரே இருக்காது.
நான்தான் முதன் முதல் செந்தூரப்பூ என்று எழுதினேன்” என்றார்.
உண்மைதான்..
செந்தூரப் பூ மரம் வட இந்தியாவில் மட்டுமே உண்டு. 16 வயதினிலே படம்.. செந்தூரப்பூவே பாடல்.. வெளியானது 1977ம் ஆண்டு. ஆனால் 45 வருடங்கள் கழித்து, கடந்த (2022)ம் ஆண்டுதான் முதன் திருச்சியில் செந்தூரப்பூ மரக்கன்று நடப்பட்டது
சத்தீஷ்கர் மாநிலத்தில் இருந்து விதைகள் கொண்டுவரப்பட்டு, திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் செந்தூரப்பூ மரக்கன்று நடப்பட்டது.
தமிழ்நாட்டில் இல்லாத பூவை பாடலில் கொண்டு வந்த கங்கை அமரன் ஆச்சரிய கவிஞர்தான்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..
https://www.youtube.com/watch?v=PfTZhwHNR2k&t=453s