Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

39 வயது வித்தியாசம்… ரஜினியுடன் நடித்தது ஏன்?: தமன்னா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெயிலர் படத்தில், ஹீரோவாக நடித்துள்ள ரஜினிகாந்த்க்கு தற்போது 72 வயதாகும் நிலையில், நாயகியாக நடித்துள்ள தமன்னாவுக்கு 33 வயதாகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த தமன்னாவிடம், வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஏன் வயது வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்? திரையில் நடிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை நீங்கள் பார்க்க வேண்டும்.
இதற்கு ஹாலிவுட் நடிகர் நடிகர் டாம் குரூஸை உதாரணமாக கூறலாம்.  தனது வாழ்க்கை முழுவதும், குரூஸ் பல அதிரடித் திரைப்படங்களில் நடித்த டாம்,  அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இதில் எந்த ஸ்டண்ட் காட்சிகளுக்கும் அவர் டூப் பயன்படுத்தியதில்லை.

“நான் வயதைப் பற்றி பேச வேண்டும் என்றால், 60 வயதிலும் டாம் குரூஸின் ஸ்டண்ட்களைப் பார்ப்பேன். அதேபோல் அந்த வயது வரும்போது நான் அசத்தலான நடனம் ஆட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News