Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
First look – Touring Talkies https://touringtalkies.co Fri, 29 Dec 2023 02:17:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png First look – Touring Talkies https://touringtalkies.co 32 32 அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! https://touringtalkies.co/first-look-of-ameer-direction-iraivan-miga-periyavan-film-released/ Mon, 25 Dec 2023 02:16:34 +0000 https://touringtalkies.co/?p=39182 இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கும் திரைப்படம் இது. இந்தப் படத்தை ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாஃபர் சாதிக் தயாரிக்கிறார். படத்துக்கான கதையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு வடிவமைப்பை பார்க்கும் போது மதம் சார்ந்த கருத்தை உரக்க பேசும் […]

The post அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கும் திரைப்படம் இது.

இந்தப் படத்தை ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாஃபர் சாதிக் தயாரிக்கிறார். படத்துக்கான கதையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் தலைப்பு வடிவமைப்பை பார்க்கும் போது மதம் சார்ந்த கருத்தை உரக்க பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படம் கடைசியாக கடந்த 2013-ல் வெளியாகி இருந்தது. அதன் பிறகு வட சென்னை உட்பட சில படங்களில் நடித்திருந்தார். மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் ஆகிய படங்களை இதற்கு முன்னர் அமீர் இயக்கி இருந்தார்.

 

The post அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
திகில் திறைந்த ’சப்தம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/the-first-look-of-the-horror-film-sabdam-is-released/ Fri, 15 Dec 2023 01:09:42 +0000 https://touringtalkies.co/?p=38853 அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்தார் இயக்குநர் அறிவழகன். இதைதொடர்ந்து 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரிப்பில் நடிகர் ஆதி கதாநாயகனாக சப்தம் படத்தில் நடித்து வருகிறார் இந்த  படத்தையும் அறிவழகன் இயக்குகிறார். இதன் மூலம் இயக்குநரின் முதல் படமான ஈரம் படத்துக்கு பிறகு  14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஈரம், வல்லினம், ஆறாது சினம் என தொடர்ந்து மூன்று படங்களில் அறிவழகனுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் தமனும், இந்த படத்தில் […]

The post திகில் திறைந்த ’சப்தம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்தார் இயக்குநர் அறிவழகன். இதைதொடர்ந்து 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரிப்பில் நடிகர் ஆதி கதாநாயகனாக சப்தம் படத்தில் நடித்து வருகிறார் இந்த  படத்தையும் அறிவழகன் இயக்குகிறார்.

இதன் மூலம் இயக்குநரின் முதல் படமான ஈரம் படத்துக்கு பிறகு  14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஈரம், வல்லினம், ஆறாது சினம் என தொடர்ந்து மூன்று படங்களில் அறிவழகனுடன் பணியாற்றிய இசையமைப்பாளர்
தமனும், இந்த படத்தில் அவருடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.

ஈரம் படத்தை போன்றே இந்த படமும் சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டிசம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ‘ஆல்பா ப்ரேம்ஸ்’ சார்பில் இணைந்து தயாரிக்கும் ‘சப்தம்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமிழில் சமீப காலமாக திகில் படங்களில் வருகை குறைவாக இருந்த நிலையில், சப்தம் திரைப்படம்

திகில், சஸ்பென்ஸ் படமாக ரசிகர்களை மிரட்டவருகிறது.

The post திகில் திறைந்த ’சப்தம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
 ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு https://touringtalkies.co/the-first-look-teaser-of-the-second-part-of-gandhara-is-released/ Mon, 27 Nov 2023 18:29:11 +0000 https://touringtalkies.co/?p=38307 ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. […]

The post  ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி, நாயகனாகவும் நடிக்கிறார். டீசரில் கையில் திரிசூலத்துடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் தோன்றுகிறார் ரிஷப் ஷெட்டி. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

 

The post  ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
காந்தாரா: சாப்டர் ஒன்’ ஃபர்ஸ்ட்  லுக்   நவ.27 வெளியீடு.! https://touringtalkies.co/kantara-chapter-one-first-look-out-nov-27/ Sat, 25 Nov 2023 03:11:14 +0000 https://touringtalkies.co/?p=38242 ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய திரைப்படம் ‘காந்தாரா. கிஷோர், சப்தமி கவுடா பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம்  ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு ஏற்கானவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க […]

The post காந்தாரா: சாப்டர் ஒன்’ ஃபர்ஸ்ட்  லுக்   நவ.27 வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய திரைப்படம் ‘காந்தாரா. கிஷோர், சப்தமி கவுடா பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம்  ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு ஏற்கானவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்துக்கு ’காந்தாரா: சாப்டர் ஒன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘காந்தாரா 2’ படம் 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தப் படம் ‘காந்தாரா’ படத்தின் முன்கதையை அடிப்படையாக கொண்டு உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post காந்தாரா: சாப்டர் ஒன்’ ஃபர்ஸ்ட்  லுக்   நவ.27 வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
நடன இயக்குனர் சாண்டி நடிக்கும்  ’ரோசி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் https://touringtalkies.co/first-look-poster-of-rosie-starring-choreographer-sandy/ Fri, 17 Nov 2023 00:30:00 +0000 https://touringtalkies.co/?p=37973 தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர்  சாண்டி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார். சைக்கோ கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், சாண்டி தற்போது கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமாக உள்ளார். கன்னட இயக்குநர் ஷூன்யா இயக்கும் புதிய படம் ‘ரோசி’. நடிகர் யோகேஷ் நடிக்கும் இப்படத்துக்கு குருகிரண் இசையமைக்கிறார். இப்படத்தில் ஆண்டாள் கதாபாத்திரத்தில் நடிகர் சாண்டி நடிக்கிறார். அவரது தோற்றத்துடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. […]

The post நடன இயக்குனர் சாண்டி நடிக்கும்  ’ரோசி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர்  சாண்டி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார். சைக்கோ கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், சாண்டி தற்போது கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமாக உள்ளார். கன்னட இயக்குநர் ஷூன்யா இயக்கும் புதிய படம் ‘ரோசி’. நடிகர் யோகேஷ் நடிக்கும் இப்படத்துக்கு குருகிரண் இசையமைக்கிறார். இப்படத்தில் ஆண்டாள் கதாபாத்திரத்தில் நடிகர் சாண்டி நடிக்கிறார். அவரது தோற்றத்துடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

பெண் தோற்றத்தில் டெரரான லுக்கில் சிவப்பு வண்ணம் தெறிக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் ரசிகர்களின் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துள்ளது.  இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, “ஒரு நடிகராக உங்களின் இந்த புதிய பாதை மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

The post நடன இயக்குனர் சாண்டி நடிக்கும்  ’ரோசி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
ரன்பீர் கபூரின் ‘அனிமல்’:  ராஷ்மிகாவின் லுக் வெளியீடு https://touringtalkies.co/rashmika-mandanna-first-look-out-from-ranbir-kapoor-animal/ Sun, 24 Sep 2023 03:41:12 +0000 https://touringtalkies.co/?p=36542 ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் கைகோத்துள்ளார். இப்படத்துக்கு ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ப்ரீ டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. […]

The post ரன்பீர் கபூரின் ‘அனிமல்’:  ராஷ்மிகாவின் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் கைகோத்துள்ளார். இப்படத்துக்கு ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ப்ரீ டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் இறுதிகட்ட பணிகள் தாமதமானதால் டிசம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அவரது கதாபாத்திர பெயர் ‘கீதாஞ்சலி’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ’அனிமல்’ படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனில் கபூரின் கதாபாத்திர லுக்கை படக்குழு வெளியிட்டிருந்தது.

The post ரன்பீர் கபூரின் ‘அனிமல்’:  ராஷ்மிகாவின் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
மிரட்டும் ‘சைரன்’ ஜெயம் ரவி! https://touringtalkies.co/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%b5/ Mon, 11 Sep 2023 01:34:26 +0000 https://touringtalkies.co/?p=36135 ‘சைரன்’ படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். அவரின் 21 வருட திரை வாழ்க்கையில் இதுவரை நடிக்காத தோற்றத்தில் மிரட்டலாக தோன்றியுள்ளார். ஒரு தோற்றம் அமைதி கலந்த கோபமான தோற்றத்திலும் இன்னொரு கதாபாத்திரம் இளமை […]

The post மிரட்டும் ‘சைரன்’ ஜெயம் ரவி! appeared first on Touring Talkies.

]]>
‘சைரன்’ படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார்.

அவரின் 21 வருட திரை வாழ்க்கையில் இதுவரை நடிக்காத தோற்றத்தில் மிரட்டலாக தோன்றியுள்ளார். ஒரு தோற்றம் அமைதி கலந்த கோபமான தோற்றத்திலும் இன்னொரு கதாபாத்திரம் இளமை துள்ளலுடன் ரொமான்ஸ் பார்வையிலும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்று இசை வெளியீடு நடைபெற உள்ளது. ‘சைரன்’ படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

The post மிரட்டும் ‘சைரன்’ ஜெயம் ரவி! appeared first on Touring Talkies.

]]>
நூடுல்ஸ் பர்ஸ்ட் லுக் வெளியீடு  https://touringtalkies.co/noodles-first-look-release/ Sat, 19 Aug 2023 04:18:46 +0000 https://touringtalkies.co/?p=35447 ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) அருண்பிரகாஷ் தயாரிப்பில் ‘அருவி’ மதன் இயக்கத்தில் உருவாகும் படம்  ‘நூடுல்ஸ்’. ஹரீஷ் உத்தமன் – ஷீலா ராஜ்குமார்  ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், ஆழியா க, திருநாவுக்கரசு, மில்லர்,  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். ஒளிப்பதிவை வினோத் கவனிக்க, படத்தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட கருத்தாழம் மிக்க படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டம் கொண்ட […]

The post நூடுல்ஸ் பர்ஸ்ட் லுக் வெளியீடு  appeared first on Touring Talkies.

]]>
ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) அருண்பிரகாஷ் தயாரிப்பில் ‘அருவி’ மதன் இயக்கத்தில் உருவாகும் படம்  ‘நூடுல்ஸ்’.

ஹரீஷ் உத்தமன் – ஷீலா ராஜ்குமார்  ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், ஆழியா க, திருநாவுக்கரசு, மில்லர்,  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

ஒளிப்பதிவை வினோத் கவனிக்க, படத்தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார்.

நல்ல கதையம்சம் கொண்ட கருத்தாழம் மிக்க படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டம் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘நூடுல்ஸ்’ படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக தனது
‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் மூலமாக இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

வரும் செப்-1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் கதை பற்றியும் படம் உருவான அனுபவம் குறித்தும் இயக்குனர் அருவி மதன் கூறும்போது, “இரண்டே நிமிடங்களில் பரிமாறக் கூடிய உணவு ‘நூடுல்ஸ்’.
இப்படி இரண்டே நிமிடங்களில் நமது தேவையை தீர்க்கக்கூடிய, நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் பல சமயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால், நாயகி செய்த செயலால் அந்தக் குடும்பமே காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது” என்றார்.

இந்நிலையில் நூடுல்ஸ் படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

 

The post நூடுல்ஸ் பர்ஸ்ட் லுக் வெளியீடு  appeared first on Touring Talkies.

]]>
‘சந்திரமுகி 2’ : வேட்டையன்  பராக்! https://touringtalkies.co/first-look-of-raghava-lawrence-as-vettaiyan-in-chandramukhi-2/ Tue, 01 Aug 2023 05:16:34 +0000 https://touringtalkies.co/?p=34905 பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை அவரே இயக்குகிறார். ரஜினி நடித்த வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இதில் ராகவா லாரன்ஸுடன், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கீரவாணி இசையமைத்து இருக்கிறார் தோட்டா தரணி […]

The post ‘சந்திரமுகி 2’ : வேட்டையன்  பராக்! appeared first on Touring Talkies.

]]>
பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை அவரே இயக்குகிறார். ரஜினி நடித்த வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இதில் ராகவா லாரன்ஸுடன், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கீரவாணி இசையமைத்து இருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டு இருக்கிறார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.  இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தில் வரும் வேட்டையன் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட்  லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

The post ‘சந்திரமுகி 2’ : வேட்டையன்  பராக்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுபதியின் 50-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ் https://touringtalkies.co/actor-vijay-sethupathy-50th-movie-first-look-poster-will-be-revealed-today/ Wed, 12 Jul 2023 04:07:21 +0000 https://touringtalkies.co/?p=34296 விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படங்கள் வெளியாகின. பாலிவுட்டில் தடம் பதித்த அவரின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். போலவே, ‘மேரி கிறிஸ்துமஸ்’ பாலிவுட் படத்தில் கத்ரீனா கைஃபுடன் இணைந்து நடித்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் அவரின் 50-வது படத்தை ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் […]

The post விஜய் சேதுபதியின் 50-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ் appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படங்கள் வெளியாகின. பாலிவுட்டில் தடம் பதித்த அவரின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். போலவே, ‘மேரி கிறிஸ்துமஸ்’ பாலிவுட் படத்தில் கத்ரீனா கைஃபுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் அவரின் 50-வது படத்தை ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம்  இன்று – ஜூலை 12 –  வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர்களும் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post விஜய் சேதுபதியின் 50-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ் appeared first on Touring Talkies.

]]>