தமிழ் திரையுலகில் ட்ரெண்ட் செட்டர்களில் ஒருவர் டி.ராஜந்தர். ஒரு பேட்டியில் அவரிடம், உங்களுக்கு எந்த நடிகர்களை பிடிக்கும் என கேட்கப்பட்டது.
அதற்கு அவர் “எம்.ஜி.ஆர் சிவாஜியை பார்த்து வளர்ந்தவன். அவர்கள் இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். எம்.ஜி.ஆர் ஒரு வகையான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்றால் சிவாஜி ஒரு வகையான நடிப்பை வெளிப்படுத்துவார்.
அதற்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்கள் என்றால் அது ரஜினி மற்றும் கமல்ஹாசன்தான். முக்கியமாக நான் கமல்ஹாசனுக்கு மிகப்பெரும் ரசிகனாக இருந்துள்ளேன். அவர் கட்சி துவங்கியபோது இனி நடிக்க மாட்டேன் என கூறினார்.
அதை கேட்டதும் எனக்கு வருத்தமாகிவிட்டது. உடனே கமல்ஹாசனை நேரில் சந்தித்தேன். அவரிடம் நீங்க கட்சி துவங்குங்க அண்ணா அது தப்பில்லை. அதுக்காக நடிக்க மாட்டேன் என சொல்லாதீர்கள் என கூறி அழ துவங்கிவிட்டேன். பிறகு என்னை கமல்ஹாசன் சமாதானப்படுத்தினார்” என்று சொல்லியிருக்கிறார் டி.ஆர்.