Touring Talkies
100% Cinema

Wednesday, October 8, 2025

Touring Talkies

உதயமானது டி.ராஜேந்தரின் தயாரிப்பாளர்கள் சங்கம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இயக்குர், நடிகர், தயாரிப்பாளரான டி.ராஜேந்தர் தலைமையில் புதிதாக உருவாகியிருக்கும் தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தின் அறிமுக விழா இன்று காலை டி.ராஜேந்தரின் வீட்டில் நடைபெற்றது

இந்த விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

சங்கத்தின் நிறுவனர்களாக டி.ராஜேந்தரும், அவரது மனைவி உஷா ராஜேந்தரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர் – டி.ராஜேந்தர்

செயலாளர் – N. சுபாஷ் சந்திர போஸ்

செயலாளர் – J.S.K. சதிஷ் குமார்

பொருளாளர் – K.ராஜன்

துணை தலைவர் – P.T. செல்வ குமார்

துணை தலைவர் – R.சிங்கார வடிவேலன்

இணை செயலாளர் – K.G. பாண்டியன்

இணை செயலாளர் – M. அசோக் சாம்ராஜ்

இணை செயலாளர் – சிகரம்.R.சந்திர சேகர்

சங்கத்தின் நோக்கங்களாக..

1. புதிய, சிறிய படத் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்குவோம்.

2. VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களை தவீர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

3. திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கி தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்கு, புதிய, உரிய வழிமுறைகளைக் காட்டுவோம்.

4. F.M.S, சாட்டிலைட், O.T.T. மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி தயாரிப்பாளர்கள் லாபம் ஈட்ட முயற்சிகளை மேற்கொள்வோம்.

5. பட வெளியீட்டின்போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாக பேசி தீர்க்க ஆவண செய்வோம்.

என்று அறிவித்துள்ளனர்.

தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான திருமதி உஷா ராஜேந்தர், STR பிக்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்த சங்கத்தில் உறுப்பினராக இணைந்துள்ளர்.

- Advertisement -

Read more

Local News