வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துவரும் ‘விடுதலை’ படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர். இதைத் தொடர்ந்து அவர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதைக் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விழா ஒன்றில் வெற்றிமாறன் அறிவித்தார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ‘பருத்திவீரன்’ படப் பிரச்சினை தொடர்பாக அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அமீருடன் சூர்யா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன், அமீரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். ‘வாடிவாசல்’ படத்தில் அமீரின் கதாபாத்திரம் குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர். இதனால் ‘வாடிவாசல்’ படத்தில் அமீர் நடிப்பது உறுதியாகியுள்ளது.