Thursday, April 11, 2024

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா, அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார்.

Studio Green & UV Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் வம்சி கிருஷ்ணா, பிரமோத் & K.E.ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

மிகப் பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநரான சிறுத்தை’ சிவா இயக்குகிறார்.

எழுத்து, இயக்கம் – சிவா, இசை – ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவு – வெற்றி பழனி சுவாமி, கலை இயக்கம் – மிலன், படத் தொகுப்பு – நிஷாத் யூசுப், சண்டைப் பயிற்சி இயக்கம் – சுப்ரீம் சுந்தர், இணை எழுத்து – நாராயணா, வசனம் – மதன் கார்க்கி, நடனப் பயிற்சி இயக்கம் – ஷோபி, உடைகள் – ராஜன், உடை வடிமைப்பு –  தாட்சயணி, அனுவர்தன், ஒப்பனை – குப்புசாமி, தயாரிப்பு ஒருங்கிணைப்பு – R.S.சுரேஷ் மணியன், VFX – ஹரிஹர சுதன், புகைப்படங்கள் – C.H.பாலு, விளம்பர வடிவமைப்பு – கபிலன் செல்லையா, பத்திரிகை தொடர்பு – Suresh Chandra & Rekha D’One, தயாரிப்பு – K.E.ஞானவேல் ராஜா, வம்சி, பிரமோத், பேனர்: Studio Green, UV creations.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதையொட்டி இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் சூர்யா கூர்மை மிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார். வலிமை மிகு வீரம்’ எனும் அடைமொழியுடன் வரும் டைட்டில், கதையின் தன்மையை சொல்வதாக அமைந்துள்ளது. DSPயின் பின்னணி இசையும் விஷுவலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.

இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பும், மற்ற விவரங்களும் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

- Advertisement -

Read more

Local News