சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. இவர் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து ’கங்குவா’ படத்தை இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகை திஷா பதானி, யோகி பாபு, இந்தி நடிகர் பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ஆக் ஷன் காட்சிகள் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்தன. இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே தொடங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.