பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படம் ஏராளமான விருதுகளையும்,பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தது. பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை பார்த்த சூர்யா பாலாவிடம் சென்று ’என்னை வைத்து படம் பன்னுங்கள் என்று கேட்டுள்ளார்.
அப்படி உருவானது தான் ’நந்தா’ திரைப்படம். இந்த படத்திற்கு பிறகு ’காக்க காக்க’ திரைப்படத்தில் நடித்தார் சூர்யா. மீண்டும் பாலா, சூர்யா இருவர் கூட்டணியில் உருவானது பிதாமகன். பாலா படங்களில் நடித்து தேர்ச்சியான நடிகராக சினிமாவில் ஜொலிக்க தொடங்கிவிட்டார் சூர்யா.
அதன் பிறகு சினிமாவில் பாலாவுக்கு வாய்ப்புகள் பெரிதாக இல்லை. அந்த காலகட்டத்தில் பாலாவை அழைத்த சூர்யா. உங்கள் இயக்கத்தில் நான் நடிக்கிறேன் கதையை தயார் செய்யுங்கள் எனக் கூறினார். சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை இயக்கினார் பாலா. ஆனால் படத்தின் கதையை முழுமையாக முடிக்காமல், எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. எடுத்த காட்சிகள் மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டதால் அதிருப்தியான சூர்யா படத்தில் இருந்து விலகினார்.