லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று(ஆக., 14) உலகம் முழுக்க ‛கூலி’ படம் வெளியானது. ரஜினிக்கு திரையுலகில் இது 50வது ஆண்டு என்பது இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

ரஜினியுடன் கூலி படத்தில் சத்யராஜ், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவுபின் சாகிர், கன்னட நடிகர் உபேந்திரா, ஹிந்தி நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி வரவேற்பை பெற்று இருந்தது.
தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளன நிலையில். முதல்காட்சி காலை 9 மணிக்கே துவங்கியது.அதேசமயம் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மற்ற மாநிலங்களில் காலை 5, 6 மணிக்கே முதல்காட்சி துவங்கிவிட்டது. கூலி படத்திற்கு முதற்கட்டமாக கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.