Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

சிகரெட் குடித்தபடியே… ரஜினியின் ஆச்சர்ய வீடியோ

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனக்கு இருந்த குடி, புகை பழக்கம் குறித்து ரஜினியே வெளிப்படையாக பல முறை பேசி இருக்கிறார்.

படப்பிடிப்புக்குக்கூட மது அருந்தி செல்லும் பழக்கம் இருந்ததாகவும், ஒரு முறை இயக்குநர் கே.பாலசந்தர் கடுமையாக கண்டித்தததால் அந்த பழக்கத்தை நிறுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

பிற்காலத்தில் இந்த பழக்கங்களை விட்ட ரஜினி, பிறருக்கும் இது குறித்து அறிவுரை வழங்கும் அளவுக்கு ஆகிவிட்டார்.

அதிலும் பாபா படத்தில் ரஜினி சொன்ன அட்வைஸை கேட்டு அவரது பல ரசிகர்கள் புகை, குடி பழக்கத்தை நிறுத்தினர்

இப்படி ஒரு நிலையில் ரஜினிகாந்த் புகைபிடித்துக்கொண்டே பேட்டி கொடுக்கும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டு கொண்டு இருக்க சிகரெட்டை பிடித்துக்கொண்டே அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் பலர், “ எப்படி இருந்த ரஜினி, இப்போது புகைப்பழக்கத்தைவிட்டு இப்படி ஆகிவிட்டார்” என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News