Saturday, April 13, 2024

நடிகர் மதன் பாப்பின் காலில் விழப் போன ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் எளிமையும், அடக்கமும் உலகம் அறிந்ததே. தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், ஆன்மீகத் தேடலில் அவரது முனைப்பு பற்றியும் அனைவரும் அறிவார்கள்.

அப்படியொரு முறை நகைச்சுவை நடிகர் மதன் பாப்பிடம் கேள்வி கேட்டு கிடைத்த பதிலில் அதிர்ச்சியடைந்த ரஜினி, மதன் பாப்பின் காலில் விழப் போனார் என்ற சுவாரஸ்யமான செய்தி கிடைத்துள்ளது.

‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் நடிகர் மதன் பாப் அளித்த பேட்டியில் இதனைக் கூறியிருக்கிறார்.

மதன் பாப் இது பற்றிப் பேசும்போது, “லிங்கா’ படத்தின் ஷூட்டிங்கின்போது ரஜினி ஸார், கேரவன் வேனுக்கே போகாமல் எங்களோட வெளியில் உக்காந்துதான் பேசிக் கொண்டிருப்பார்.

அப்போது எங்களுடன் விஜயகுமாரும் நடித்துக் கொண்டிருந்தார். விஜயகுமாருக்கு என்னை ரொம்ப வருடங்களாகத் தெரியும். அதனால் ரஜினியிடம் என்னைக் காட்டி, ‘இவர் நிறைய படிச்சவரு.. எல்லாம் தெரிஞ்சவரு..’ என்று சொல்லிவிட்டார்.

இதனால் ரஜினி என்னிடம் நிறைய பேசுவார். அப்போது ஒரு முறை, ‘ஆன்மீகம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?’ என்று கேட்டார் ரஜினி. அதற்கு நான், ‘அலை கடலைத் தேடுது.. சட்டையில் இருக்கும் நூல் சட்டையைத் தேடுது. அதுபோலத்தான் நாமளும் கடவுளைத் தேடுறோம்’ன்னு சொன்னேன்.

கடல்ல இருந்துதான் அலை கிளம்புது. ஆனால் அது தெரியாமல், கடலையே தேடுது அலை. சட்டைல இருந்துதான் நூல் வெளில வருது. ஆனால் இது நூலுக்குத் தெரியாமல், சட்டை எங்கேயிருக்குன்னு தேடுது. அது மாதிரிதான் நாமளும்.. நமக்குள்ள இருக்குற கடவுளை தெரியாமல் நாமளே வெளில தேடிக்கிட்டிருக்கோம்.. இதைத்தான் நான் ரஜினி ஸாரிடம் சொன்னேன்.

அவ்வளவுதான்.. ரஜினி ஸார் பட்டென்று எந்திரிச்சு என்னை நோக்கி வந்தார். அவர் வந்த தோரணையிலேயே கால்ல விழுகத்தான் போறாருன்னு தெரிஞ்சு போச்சு. எந்திரிச்சு தெறிச்சு ஓடிட்டேன். ஆனாலும், ரஜினி ஸார் நான் உக்காந்திருந்த இடத்துல இருந்த மண்ணை எடுத்து தன் நெத்தியில பூசிட்டு தன்னோட சேர்ல போய் உக்காந்தார்.

அவர் எவ்வளவு பெரிய மனிதர்..? இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டார். என் கால்ல போய் விழுகலாமா..? அப்படி விழுகணும்ன்னு நினைச்சார் பாருங்க.. அந்த மனசுதாங்க ரொம்பப் பெரிசு..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் மதன் பாப்.

- Advertisement -

Read more

Local News