Friday, September 20, 2024

“கனவு நிறைவேறியது..”:  மேடையில் கலங்கிய நடிகை சுனைனா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டொமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா நடித்துள்ள ‘ரெஜினா’ திரைப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கேரளா மாநிலம் கொச்சியில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகை சுனைனா, “சில்லுக்கருப்பட்டி படத்தில் எனது நடிப்பை பார்த்து விட்டு தான் இந்த படத்தில் நடிக்க அழைத்ததாக இயக்குநர் கூறினார்.  இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றவர், உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு கட்டத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என எல்லோரும் எனக்கு ஆலோசனை சொல்ல ஆரம்பித்தனர். இதனால் ரொம்பவே களைப்படைந்து விட்டேன். ஆனால்,  நான் என்ன செய்ய வேண்டும் என நானே முடிவெடுத்தேன்.

அது சரியான பாதையை எனக்குத் தந்ததது. பிறரது ஆலோசனைகளை கேட்பது தவறல்ல. ஆனால் முடிவு நம்முடியதாக இருக்க வேண்டும்” என்றார் சுனைனா.

- Advertisement -

Read more

Local News