விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் இன்று வெங்கட் பிரபு “நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற படத்தின் அப்டேட் வெளியிட்டார். இதில் ஏமாற்றமடைந்த ரசிகர் ஒருவர் தான் விஜய் படத்தின் அப்டேட் என நினைத்ததாகவும், அதனால் என்ன வாழ்த்துக்கள் எனவும் கமெண்ட் செய்திருந்தார்.
அதற்கு கமெண்ட்டில் பதிலளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, “தளபதி 68 சும்மா தெறிக்கும். காத்திருங்கள்” என பதில் அளித்து உள்ளார்.