Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

நடிகர் ஆர்யா மீதான வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனியில் வசிக்கும் பெண் ஒருவர் கொடுத்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆர்யாவுக்கு சம்பந்தமே இல்லாத வேறு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் ஒருவர் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிவிட்டதாகச் சொல்லி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைனில் புகார் அளித்தார். ஆர்யாவுக்கு பணம் அனுப்பியதற்கான ஆதாரங்களையும் அந்த பெண் வெளியிட்டார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த மத்திய குற்றப் பிரிவு அலுவலகம் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பியது.

கடந்த 10-ம் தேதி ஆர்யா போலீசார் முன்பு ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்தார். ஜெர்மனி பெண்ணை “தனக்கு யார் என்றே தெரியாது…” என்றார். இதையடுத்து ஆர்யாவின் போனை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது அந்த எண்ணில் இருந்து ஜெர்மனி பெண்ணுக்கு எந்த அழைப்பும், மெசேஜும் செல்லவில்லை என்பது தெரிய வந்தது.

பின்பு சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரின் மைத்துனரான முகமது ஹுசைனி ஆகியோர்தான் ஆர்யாவின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இணையத்தளத்தில் தன்னை ஆர்யாவாக அறிமுகப்படுத்திக் கொண்டு அர்மான் தான் அந்த ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியிருக்கிறார். அவருக்கு ஹுசைனி துணையாக இருந்திருக்கிறார். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், லேப்டாப் மற்றும் ஐபேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கைது சம்பவத்திற்குப் பின்பு நடிகர் ஆர்யா தனது டிவீட்டர் பக்கத்தில், “உண்மைக் குற்றவாளியை கைது செய்த சென்னை போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் கமிஷனர், சென்னை சைபர் கிரைம் பிரிவு ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோசமான மன உளைச்சலில் இருந்தேன். என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி…” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News