ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுவது டிரெண்டாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’, கமல் நடித்த வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. சில நாட்களுக்கு முன்பு ‘சுப்ரமணியபுரம்’ படமும் ரீ-ரிலீஸ் ஆனது. இதற்கு முன்பு சிவாஜி, எம்ஜி.ஆர். படங்களும் வெளியானது.
இவை ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் அஜித்குமாரின் சூப்பர்ஹிட் படங்களான ‘அமர்க்களம்’, ‘தீனா’ போன்ற படங்களும், சூர்யாவின் திரை பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய ‘காக்க… காக்க…’, மாதவன் நடித்த ‘மின்னலே’, கார்த்தி அறிமுகமாகிய ‘பருத்திவீரன்’ போன்ற படங்களும் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
இது குறித்து திரைத்துறை வட்டாரத்தில், “புதிய படங்கள் வெளியாகும் போது நடிகர்களிடையே போட்டி இருக்கும். இப்போது தங்கள் பழைய படங்களை வெளியிட்டு அதில் யாருக்கு அதிக வசூல் என்பதிலும் போட்டி ஏற்பட்டுள்ளது” என்று கூறப்படுகிறது.