Thursday, April 11, 2024

“போட்ட பணம் திரும்ப வந்தாலே வெற்றிதான்..” – இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா’ ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படம் ஜூன் 14-ம் தேதி வெளியாகியுள்ளது.

இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா’ ஓடிடி தளத்தின் வழியாக கண்டுகளிக்கலாம். இதனை ஒட்டி படக் குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர் சீனு ராமசாமி  பேசும்போது, “கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது. காயங்களோடு இருப்பவனை விரட்டி கொத்தும் காக்கையை பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பை, தங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன்.

நீங்கள் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்தக் காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு போட்ட பணம் திரும்ப வந்தால் அதுவே வெற்றிதான். திரையரங்குகளில் இந்தப் படம் நன்றாகவே போனது. ஆனால் அதன் லாபம் என்பதுதான் தொக்கி நின்றது.

அந்த நேரத்தில்தான் இந்த ஆஹா’ ஓடிடி தளம் எங்கள் முன் வந்தது. அவர்களால் இன்று இப்படம் 155 நாடுகளை சென்றடைந்துள்ளது. எல்லோரும் பார்த்து பாராட்டுகிறார்கள். இதற்காக தனிப்பட்ட முறையில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

திரையரங்கில் தவறவிட்டவர்கள் ஓடிடியில் கண்டு களிக்கலாம். திரையரங்கில் என்ன குவாலிட்டியில் படம் இருந்ததோ, அதே போல்தான் ஓடிடியிலும் உள்ளது. தயாரிப்பாளர் யுவன் அவர்களுக்கும், நாயகன் விஜய் சேதுபதிக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News