தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் பிரகாஜ் ராஜ். இவர் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகம், அவரை பேச அழைத்தது. இதையடுத்து அவர் அங்கு சென்று சினிமா, சமூகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சி பற்றி அறிந்த பாஜக உறுப்பினர்களும், பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரியின் வளாகம்முன் குவிந்த கல்லுரி மாணவர்கள் அவரது வருகையை தடுக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் இந்த போராட்டத்தை கைவிட கோரினர். ஆனாலும் அவர்கள் அதை கேட்க வில்லை. இதனையடுத்து மாணவர்களை தடுக்கும் நோக்கில் தடுப்புகளை அங்கு அமைத்து அவர்களை தடுத்தனர்.
இதன் பின்னர் நடிகர் பிரகாஷ்ராஜ் அங்கு வந்து சிறப்பு விருந்தினராக பேசிய பிறகு அவர் அங்கு இருந்து வெளியேறினார். அவர் சென்ற பிறகு அவர் நின்று கொண்டிருந்த இடத்தை சுத்தம் செய்வதாகக் கூறி, கோமியம் தெளித்து அந்த இடத்தை கழுவினர்.
இதை, அங்கு இருந்த மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.