Saturday, October 5, 2024

இளையராஜாவின் பயோபிக் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதும் எஸ். ராமகிருஷ்ணன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியத் திரையுலகத்தில் மட்டுமல்ல, இசையுலகமே வியந்து பார்க்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. அவரது வாழ்க்கை வரலாறு ‘இளையராஜா’ என்ற பெயரிலேயே உருவாகி வருகிறது. இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ், மேலும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா மிகவும் கோலாகலமாக நடந்தது, மற்றும் தற்போது படத்தின் முன்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை பிரபல எழுத்தாளரான எஸ்ரா என அழைக்கப்படும் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிக் கொண்டிருக்கிறார். இது பற்றிய தகவலை அவர் தனது இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

“இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுவதில் எனக்கு பெரும் பெருமிதம். அதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் என்னை தொடர்பு கொண்டு, இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ள அழைத்தார். அதன் பிறகு நான் திரைக்கதை எழுதிய பணியில் ஈடுபட்டேன்.

இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று, அவர் வாழ்ந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம் போன்ற பல இடங்களைப் பார்த்தோம். மேலும், அங்கு உள்ள ஊர்மக்களிடம் பேசியும் தகவல்களைத் திரட்டினோம்.

நான் இளையராஜாவின் பழைய நேர்காணல்கள், பத்திரிக்கைச் செய்திகள், அவரது பழைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அனைத்தையும் சேகரித்து வைத்தேன். அவர் குறித்து வெளியான அனைத்து தகவல்களையும் தேடித்தேடி வாசித்தேன். அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பாதை வலியும் வேதனையும் நிறைந்தது. தமிழ் திரையிசையில் அவர் சாதித்தவை நிகரற்றவை. இசையின் மானுட வடிவம் என்று சொல்வதற்கேற்ப அவர் பெரும் ஆளுமை.

அருண் மாதேஸ்வரனுடன் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படம் அவரது திரை வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும். இரண்டு மாத கால விவாதங்களுக்குப் பிறகு, திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசன வடிவத்தை எழுதி, இயக்குநரிடம் கொடுத்துள்ளேன். அவர் செய்த திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்குப் பிறகு, திரைக்கதையின் இறுதி வடிவம் உருவாகும். இளையராஜாவின் இசையை கேட்டுக் கற்று வளர்ந்த எனக்கு, அவரது வாழ்க்கையைப் பற்றி உருவாகும் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது,” என அவர் பதிவிட்டுள்ளார்

- Advertisement -

Read more

Local News