விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்து உள்ளது. அதன்படி, வரும் 19 முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிட உத்தரவிட்டது. மேலும் காலை 09.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 01.30 மணிக்குள் இந்த 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணை வெளியிட்டு உள்ளது.
தவிர, திரைப்படத்தை காண வரும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு, வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள், உரிய கட்டணம் மட்டும் பெறுவது என்றும் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.மேலும், லியோ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளே ண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.