கடந்த வியாழக்கிழமையன்று வெளியான ‘வலிமை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூலில் சாதனைப் புரிந்து வந்தாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று அஜீத்தின் ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் ‘வலிமை’ படத்திலிருந்து 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நீக்கப்பட்ட புதிய வெர்ஷன் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், இந்தியில் 15 நிமிட காட்சியை நீக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி ‘நாங்க வேற மாறி’ பாடல் காட்சியையும் நீக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.