Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

“கவர்ச்சிப் படங்கள்!”  போலீசில் பாலா புகார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பாலாவின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்க கோரி சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அவரது தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து  பாலா தரப்பு அளித்த புகாரில்,  “பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு யாரோ ஒருவர் முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.  திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில்  இன்பாக்சில் பேசுகிறார். தவிர  கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார். இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இயக்குநர் கவனத்துக்கு வந்தன.

சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

- Advertisement -

Read more

Local News