Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் 2022 தீபாவளிக்கு வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் 2022-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கார்த்தியின் ‘சர்தார்’, அஜித்தின் ’61-வது படம்’, ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ஆகிய படங்களும் இதே தீபாவளிக்கு வரவிருப்பதாகத் தெரிகிறது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பிரின்ஸ்’. இந்தப் படத்தில் உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரொமான்ஸ் – காமெடி ஜானரில் படம் உருவாகியுள்ளது.

முன்னதாக, இந்தப் படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக் குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு, தீபாவளி அன்று படம் வெளியிடப்படும் என்று நேற்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் பிரின்ஸ்’ படக் குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே தீபாவளிக்கு கார்த்தியின் ‘சர்தார்’, ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ஆகிய படங்கள் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூடவே அஜித்தின் ’61’-வது படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால், மேற்கண்ட படங்களின் வருகையால் அஜித்தின் பட வெளியீடு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News