Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

நிஜமாகவே மோதிக்கொண்ட சிவாஜி – எம்.ஜி.ஆர்.! சமரசம் செய்த என்.எஸ்.கே.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1940 ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில். பி.யு.சின்னப்பா  இரட்டை வேடத்தில் நடித்த வெளியான படம், உத்தம புத்திரன்.  எம்.வி.ராஜம்மா , டி.எஸ்.பாலையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

அதற்கு முந்தைய வருடம் (1939)  வெளியான ஹாலிவுட் ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ என்ற ஹாலிவுட் படத்தை  தழுவி எடுக்கப்பட்டது.  (இந்தத் திரைப்படம் 1847-1850 ஆம் ஆண்டு அலெக்ஸாண்ட்ரே டுமாஸ்  என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் The Vicomte of Bragelonne: Ten Years later என்ற புனைகதையை தழுவி உருவாக்கப்பட்டது)

சரி தமிழ்நாட்டு விசயத்துக்கு வருவோம்..

தமிழில் வெளியான உத்தம புத்திரன் திரைப்படத்தை மீண்டும் எடுத்து நடிக்க விரும்பினார் சிவாஜி.

டி. பிரகாஷ் ராவ் இயக்க முடிவானது. அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இந்த நிலையில் எம்.ஜி.ஆரும் இதே படத்தை உருவாக்க திட்டமிட்டார்.

சிவாஜி தரப்பில் படம் குறித்து நாளிதழில் விளம்பரம் வெளியாக, அதற்கு ஒரு நாள் முன்பு எம்.ஜி.ஆரின் உத்தம புத்திரன் விளம்பரம் வெளியானது.

ஒரே கதையை – படத்தை இருவர் எடுக்கிறார்களே என்கிற பரபரப்பு திரையுலகில் எழுந்தது. ரசிகர்களுக்கும் குழப்பம்.

பஞ்சாயத்து என்.எஸ்.கே.விடம் சென்றது.

அவர் எம்.ஜி.ஆரிடம், “ராமச்சந்திரா,..  ஏற்கெனவே இந்த படத்தை எடுத்த மார்டன் தியேட்டர் நிறுவனத்திடம் சிவாஜி தரப்பு உரிமை வாங்கி இருக்கிறது. ஆகவே நீ இந்தப் படத்தை தயாரிக்காதே” என்றார்.

எம்.ஜி.ஆரோ, “இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை.. ஆகவேதான் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டேன்” என்றார்.

என்.எஸ்.கே. மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தினார்.

இதையடுத்து உத்தமபுத்திரன் படத்தை உருவாக்குவதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.

அதே நேரம் தனது இரட்டைவேட ஆசையை நிறைவேற்ற, நாடோடி மன்னன் திரைப்படம் மூலம் நிறைவேற்றிக்கொண்டார்.
இந்த சுவாரஸ்யமான தகவலை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்தா்.

குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..

https://www.youtube.com/watch?v=PBcjqzs51VE&t=187s

- Advertisement -

Read more

Local News