Thursday, April 11, 2024

தேவா இசையில் நான் பாட மறுத்த சித்ரா! அறிவுரை சொன்ன இளையராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா. 1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தின் இடம்பெற்ற நானொரு சிந்து என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து  பல ஹிட் பாடல்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார்.

இளையராஜா, கங்கை அமரன், சங்கர் –  கணேஷ், எம்.எஸ்.வி, தேவா உள்ளிட்ட பலரது இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள கே.எஸ்.சித்ரா 6 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீரா என்ற பாடலை பாடியுள்ளார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கே.எஸ் சித்ரா தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், “நான் பாடகியாக வந்த புதிதில் வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட பலரும் நான் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல ஐடியாக்கள் கொடுத்தார்கள். பாடும்போது நான் தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டி அடுத்த பாடலில் அதை திருத்திக்கொள் என்று சொல்வார்கள்.

அப்படித்தான் ஒருமுறை தேவா இசையில் ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடலை முதலில் எஸ்பிபி சார் பாட முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால் நான் அப்படி சொல்ல முடியாது. என்ன செய்வது என்று யோசித்தேன். ஆனால் தேவா சார் சாந்தமானவர். அவரிடம் சென்று இந்த ஒரு லைன் மட்டும் மாற்றி தர முடியுமா சார் ரொம்ப வல்கரா இருக்கு என்று சொன்னேன்.

அவரும் சரிமா நான் ட்ரை பண்றேன். இன்றைக்கு இதை எடுக்க வேண்டாம். இன்னொரு நான் நான் சொல்றேன் நீங்க கிளம்புங்க என்று சொன்னார். அதன்பிறகு என்னை கூப்பிடவே இல்லை.

சில நாட்களுக்கு பிறகு இளையராஜா சார் ஸ்டூடியோவுக்கு சென்றேன். அப்போது அவர் என்னை அழைத்து தேவா சார் ஸ்டூடியோவில் பாட முடியாது என்று சொன்னாயா என்று கேட்டார்.

ஆமாம் சார் வரிகள் கொஞம்சம் வல்கரா இருந்துச்சு அதான் என்று சொன்னேன். அதற்கு அவர், அதையெல்லம் நீங்க ஏன் பாக்குறீங்க. உங்க வேலை பாடுவது மட்டும் தான். எந்த கவிஞரும் வேண்டுமென்றே அவ்வாறு எழுதமாட்டார்கள். கதைக்கு தேவையானதை தான் எழுதுவார்கள். அவர்களின் எழுத்துக்கு குரல் கொடுப்பது தான் உன் வேலை” என்று சொன்னார். அப்போது தான் நான் தவறு செய்தது புரிந்தது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News