Friday, April 12, 2024

ரசிகர் மன்றத் தலைவரை நீக்கக் கோரி சிம்புவின் ரசிகர்கள் போராட்டம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அரசியல் கட்சிகளில்தான் ஏதாவது ஒரு பிரிவின் தலைவரை, செயலாளரை நீக்கம் செய்யக் கோரி அவருக்கு எதிரானவர்கள் போராட்டம் நடத்துவார்கள். இந்த வியாதி, இப்போது நடிகர்களின் ரசிகர் மன்றத்திலும் புகுந்துவிட்டது.

நடிகர் சிம்புவிற்கு ‘அகில இந்திய சிலம்பரசன் டி.ஆர். ரசிகர் மன்றம்’ என்ற பெயரில் ஒரு சங்கம் உள்ளது. சிம்புவின் அதிகாரப்பூர்வமான சங்கமும் இதுதான். இது முன்பு ‘அகில இந்திய சிம்பு ரசிகர் மன்றம்’ என்ற பெயரில் இருந்து வந்தது. அப்போது இந்தச் சங்கத்தை டி.ராஜேந்தரின் தம்பியான வாசுதான் நிர்வகித்து வந்தார்.

அதன் பிறகு சிம்பு தன் பெயரை ‘டி.ஆர்.சிலம்பரசன்’ என்று மாற்றிக் கொண்ட பின்பு, சங்கத்தின் பெயரும் ‘அகில இந்திய சிலம்பரசன் டி.ஆர். ரசிகர் மன்றம்’ என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்தச் சங்கத்திற்கு தற்போது நாகு தம்பி என்பவர் தலைவராக இருந்து வருகிறார். இவரை மாற்றக் கோரி இன்று மதியம் திடீரென்று நடிகர் சிம்புவின் வீட்டின் முன்பாக 50 ரசிகர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

“நாகு தம்பி, சங்கத்தில் ஏதேச்சதிகாரமாக நடந்து கொள்கிறார். ஒரு சிலரை மட்டும் வைத்துக் கொண்டு சங்கத்தை நடத்துகிறார். பெருவாரியான ரசிகர்களின் குரலை அவர் கேட்பதில்லை. மற்றைய மாவட்டத் தலைவர்களை அவர் மதிப்பதில்லை.. சமீபத்தில் நடைபெற்ற ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீ்ட்டு விழாவுக்கான அழைப்பிதழைக்கூட பல மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அவர் முறையாக அனுப்பவில்லை..” என்று பலவித குற்றச்சாட்டுக்களைத் தற்போதை தலைவர் மீது சுமத்தியுள்ளனர் ரசிகர்கள்.

சிம்புவின் வீட்டின் முன்பு கூட்டம் கூடியதை அடுத்து, சங்கத்தின் ஏனைய நிர்வாகிகள் வந்திருந்த ரசிகர்களில் சிலரை அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News