Friday, April 12, 2024

‘பத்து தல’ படப்பிடிப்பில் இணைந்திருக்கும் கெளதம் கார்த்திக்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மப்ட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகிறது.

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குநரான கிருஷ்ணா இயக்குகிறார்.

சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கொரோனா காரணமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், 26.08.2021 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் துவங்கியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கௌதம் கார்த்திக் நடித்து வருவதாக தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News