Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“என் படத்தை யார் பார்ப்பார்கள் என்றனர்!” கண்கலங்கிய  சித்தார்த்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான இப்படம் தெலுங்கில் மட்டும் வெளியாகவில்லை. நாளை மறுநாள் – 6-ம் தேதி – தான் தெலுங்கில் படம் வெளியாகிறது.

அதற்கான காரணம் குறித்து படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகர் சித்தார்த், “தமிழகம் மற்றும் கேராளவின் முதன்மையான விநியோகஸ்தர்களான ரெட்ஜெய்ன்ட் மூவிஸ், ஸ்ரீ கோகுலம் சினிமாஸைச் சேர்ந்தவர்கள் இந்தப்படத்தை பார்த்து பாராட்டினர்.

கர்நாடகாவில் ‘கேஜிஎஃப்’ தயாரிப்பாளர்கள் படத்தை பார்த்துவிட்டு உரிமையை பெற்றுக்கொண்டனர்.

இந்தப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் வெளியாக வேண்டியது. ஆனால் பலரும், ‘சித்தார்த் படத்தை யார் திரையரங்குக்கு வந்த பார்க்க போகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினர். நான் அவர்களிடம் என்னுடைய படம் சிறந்த படமாக இருந்தால் கண்டிப்பாக மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று கூறினேன்.

இறுதியாக ஏசியன் பிலிம்ஸின் சுனில் ‘சித்தா’ படத்தை பார்த்து அதன் தரத்தை உணர்ந்து என் மீது நம்பிக்கை வைத்து வாங்கினார்” என்றார்.

இதற்கிடையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

Read more

Local News