Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“மது குடிப்பதை நிறுத்திவிட்டேன்!”:  சுருதிஹாசன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல் மகள் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தவர் சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா, ‘வீரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், ரசிகர்கள் என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேட்கலாம் என இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி நேரலையில் வந்தார். அதில் ஒரு ரசிகர் ‘நீங்கள் மது அருந்த பியர், விஸ்கி, காக்டெயில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்’ எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு ஸ்ருதி, ‘நான் நிதானமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக குடிப்பதில்லை. மேலும், இந்த மது வகைகள் எதுவும் என் விருப்பப் பட்டியலில் இல்லை. எப்போதாவது ஆல்கஹால் இல்லாத பியர் குடிப்பேன்’ என கூலாக பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News