“நாங்க என்ன தக்காளி தொக்கா?”: ராதிகா ஆப்தே ஆவேசம்

நாற்பது வயதை நெருங்கும் நடிகை ராதிகா ஆப்தே, “வயது மூத்த நடிகைகள் என்றால் இளக்காரமா” என்று பொங்கியுள்ளார்.

இது குறித்து அவர், “பெரிய வணிக ரீதியிலான படங்களில் இளம் நடிகைகள் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வயது முதிர்வை எதிர்கொள்ள நான் அதிகம் போராடி வருகிறேன். தங்களது முகம் மற்றும் உடல் பாகங்களை மாற்றம் செய்து கொள்வதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பல நடிகைகளை பற்றி எனக்கு தெரியும்.

ஒரு காலத்தில், ‘அது இல்லை. இது குறைவாக உள்ளது’ என சில நடிகைகள் மீது விமர்சனம் வந்தது உண்டு. அதனால் அவர்கள், அறுவை சிகிச்சை செய்து உள்ளனர்.  ஆனால் நான் அதை விரும்பவில்லை” என்று ஆவேசமாக கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.