நடிகர் சிவாஜி கணேசனும், நடிகை மனோரமாவும் சகோதர சகோதரியாக பாசத்துடன் பழகியவர்கள். இவர்களது அன்பை ஒரு சம்பவம் மூலம் முன்பு வெளிப்படுத்தினார் மனோரமா.
“என் அம்மா இறந்த நேரம். எங்கள் குல வழக்கப்படி தாயார் மறைந்ததால் முதலில் மகன் தான் கோடித் துணியைப் போர்த்த வேண்டும். ஆனால் எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லை.
அப்போது, சிவாஜி ஒரு விலை உயர்ந்த வெண்ணிறப் பட்டுப்புடவையை எனது உடன் பிறந்த சகோதரர் என்ற முறையில் தாயாரின் உடல் மீது போர்த்தினார்.
‘அண்ணே உங்களுக்கு இந்தத் தங்கச்சி மேல இத்தனை பாசமா…’ என கதறி அழுதேன். என்னைப் பார்த்து, ‘என்னைக்கும் நீ எனக்கு தங்கச்சி தாம்மா’ என்றார்’ அவரது சகோதர பாசத்தை மறக்கவே முடியாது” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார் மனோரமா.