டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலில், ஏவி.எம்.குமரன், தனது திரையுலக பயணம் குறித்து பேசி வருகிறார்.
அதில் அவர் பேசியதில் இருந்து..
“நடிகர் திலகம் சிவாஜிக்கு கதை சொல்ல சிரமப்பட வேண்டியதே இல்லை. இங்கே வா, அங்கே ரூம்போடு என்றெல்லாம் சொல்லவே மாட்டார். அவர் நடித்துக்கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இடையிலேயே கதை சொல்லலாம்.
கதையை கேட்பதோடு சரி. முதல் நாள் வசனத்தைக் கொடுத்துவிட்டால், ஹோம் ஒர்க் போல செய்வாரோ என்னவோ மறுநாள் அப்படியே உணர்ச்சிகரமாக பேசி விடுவார்.
இதே போலத்தான் இளையராஜாவும்..
அவருடன் நாங்கள் (ஏவி எம் ) இணைந்து பணியாற்றிய முதல் படம் முரட்டுக்காளை.
மறுநாள் ரெக்கார்டிங் என்றால் முதல் நாள் ஹோம் ஒர்க் செய்வார். நோட்ஸ் எழுதி வைப்பார். அவர் மட்டும்தான்.. இங்கிலீஸில் நோட்ஸ் எழுதுபவர்.
மறுநாள் கச்சிதமாக பாடல் ஒலிப்பதிவு ஆகிவிடும்” என்று தெரிவித்தார் ஏவிஎம் குமரன்.
ஏவி.எம்.குமரன் பேட்டியை முழுதுமாக பார்க்க கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..