இந்தியாவில் ஆடையின்றி புகைப்படம் பிரசுரிக்க அனுமதித்த ஒரே நடிகை ஷெர்லின் சோப்ரா.
இந்த நிலையில் தொழில் அதிபர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா மீது பாலியல் தொல்லை அளித்தாக போலீசில் புகார் அளித்து உள்ளார்
இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறியதாவது;
“தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா, ஒரு வீடியோ ஆல்பம் தயாரிக்கும்படி கோரினார். இற்காக பேச வீட்டுக்கு வந்தார். அப்போது சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென எனது மார்பைத் தொட்டார். நீங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்றார். நான் அவரை வெளியில் செல்லும்படி கூறினேன். ஆனால் அவர் எல்லை மீற முயன்றார்.
நான் எதிர்த்ததால் என் உயிருக்கு கூட மிரட்டல் விடுத்தார் என கூறினார்” என அந்த புகாரில் நடிகை ஷெர்லின் சோப்ரா தெரிவித்து உள்ளார்.
இதன் அடிப்படையில், சுனில் பரஸ்மானி லோதா மீது 3 பிரிவுகளீன் கீழ் ஜூஹூ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.