நடிகை செம்மீன் ஷீலா, ஒரு காலத்தில் கவர்ச்சியில் கொடிகட்டிப் பறந்தவர். எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.
பிறகு, குணச்சித்திர மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சந்திரமுகி திரைப்படத்தில் அகிலாண்டேஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
இவர் தனக்கு சினிமா வாய்ப்பு எப்படி வந்தது என்கிற சுவாரஸ்யமான விசயத்தை கூறியிருக்கிறார்.
ஷீலா ஒரு திருமணத்திற்காக தமிழ்நாடு வந்துள்ளார். அந்த சமயத்தில் பக்கத்து தெருவில் நாடகம் ஒன்று நடந்துள்ளது. இவருக்கு நாடகம் மீது விருப்பம் இருந்ததால் அங்கு சென்றுள்ளார். அங்கு நடிகர் எஸ்.எஸ்.ஆர் நாடகத்தில் நடித்துள்ளார்.
அவரிடம் சென்ற ஷீலா எனக்கும் நாடகத்தில் வாய்ப்பு வாங்கி தாருங்கள் என கேட்டுள்ளார். இது வாய்ப்பு கேட்கும் இடமல்ல சென்னையில் என் அலுவலகத்தில் வந்து கேளுங்கள் என கூறியுள்ளார் எஸ்.எஸ்.ஆர். உடனே சென்னைக்கு வந்துள்ளார் ஷீலா.
பிடிவாதமாக இருக்கிறாரே என ஒரு நாடகத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் எஸ்.எஸ்.ஆர். அந்த நாடகத்திலேயே இவர் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த இயக்குனர் டி.ஆர் ராமன்னா அவரது நடிப்பை கண்டு சினிமாவில் சேர்த்து கொண்டார்.
அதனை தொடர்ந்து அவர் இயக்கிய பாசம் என்கிற திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் காதலியாக நடித்தார் ஷீலா. இப்படி மிக எளிதாகவே சினிமாவில் வாய்ப்பை பெற்றுள்ளார் ஷீலா.