நடிகை ஷாலு சம்மு புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தான் இவர் இரண்டு லட்ச ரூபாய் ஐபோன் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி ஈஸ்டர் பண்டிகையை தன் நண்பர்களுடன் எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஷாலு கொண்டாடி இருக்கிறார்.
பின் பார்ட்டியை முடித்துவிட்டு இரவு 2 மணிக்கு தன் நண்பர்களுடன் சூளைமேட்டில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டிலேயே சாலு தங்கினார். அதற்குப்பின் அதிகாலை 10 மணிக்கு எழுந்து பார்த்தபோதுதான் இவருடைய ஐ போன் காணாமல் போனது தெரிந்திருக்கிறது. இதன் மதிப்பு இரண்டு லட்ச ரூபாய்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷம்மு, நண்பர்களுடன் விருந்து உண்ட விடுதிக்கு சென்று பார்த்திக்கிறார். பின் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இருக்கிறார். பின் செல்போன் வாங்கிய ஷோரூம் என பல இடங்களில் தேடியிருக்கிறார். ஆனால், செல்போன் கிடைக்கவில்லை.
இதனை அடுத்து ஷாலு கடந்த 11ஆம் தேதி தன்னுடைய செல்போன் காணவில்லை கண்டுபிடித்து தரவேண்டும் என்று பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். போலீசார் செல்போனை எண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் செல்போனை மீட்கும் செயலியான ஐகிளவுட் மூலமாக தீவிரமாக தேடியிருக்கிறார். அப்போது சூளைமேட்டில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டில் செல்போன் கடைசியாக இருந்ததை கண்டுபிடித்திருக்கிறார். இதனால் தனது நண்பர்களின் சிலரின் மீது சந்தேகம் இருப்பதாக ஷாலு மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஷாலு நண்பர்களை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறது.
இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘நண்பன் மீதே இப்படி புகார் அளிப்பேன்னு நான் நினைக்கல’ என்று சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.