ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘டங்கி’ திரைப்படம் வருகின்ற 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தின் பாடல் ஒன்றை ஷாருக் கான் தனது சமுக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்த சூழ்நிலையில் நடிகர் ஷாருக் கான் நேற்று அதிகாலை ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் ’டங்கி’ பட வெற்றிக்காக சாமி தரிசனம் செய்தார்.
இந்த ஆண்டில் வெளியான பதான் மற்றும் ஜவான் படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பும் அவர் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் கோவிலுக்கு செல்லும் போது காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.