ஒரு காலத்தில் வெற்றிகரமான நாயகனாக கோலோச்சிய பாண்டியராஜன், தற்போது குணச்சிரத்திர மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர், “நான் இயக்கிய ஆண்பாவம் படத்தில் சீதா நாயகியாக நடித்தார். அவரது பைகைப்படத்தை பார்த்து அவரது வீட்டிற்கு சென்று சீதாவை நடிக்க வைக்க அவரது தந்தையிடம் அனுமதி வாங்கினேன்.
ஆனால் படப்பிடிப்பில் எனக்கும் சீதாவிற்கும் பனிப்போராகவே இருந்தது.
நான் இல்லாத நேரத்தில் என்னை, ‘எங்கே அந்த ப்ளட் பிரசர் ஆளு’ என்றுதான் கேட்பார்.
ஒருவழியாக படம் முடிந்து வெளியானது. படத்தைப் பார்த்த சாதீ, என் காலில் விழுந்து வணங்கினார். மேலும், ‘படம் அற்புதமாக வந்து இருக்கிறது.. நான் எதாவது தவறுதலாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று சொல்லி மன்னிப்பு கேட்டார்” என்று கூறினார் ல் பாண்டியராஜன்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more