Thursday, April 11, 2024

ஷங்கருக்குத்தான் அந்த ரகசிய அறை திறக்கும்!: வசந்தபாலன் ஓப்பன் டாக்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் உட்பட பலர் நடித்திருக்கும் ‘அநீதி’ படத்தின் டிரெய்லரும் பாடல்களும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில்,  21-ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி இயக்குநர் வசந்தபாலன் கூறியதாவது:

“ உணவு விநியோகம் செய்ற தொழிலாளியின் கண்கள் வழியா இந்த உலகத்தைப் பார்க்கிறதுதான் கதை. ராத்திரி பகலா சுத்துற அவன், வெவ்வேறு சந்து பொந்துகள்ல சந்திக்கிற மனிதர்கள், அவனுக்கு என்னவெல்லாம் கிடைக்குதுன்னு கதை போகும்.

வில்லனா பிரபலமான அர்ஜுன் தாஸ் எளிமையான இளைஞனா, சிறப்பா நடிச்சிருக்கார்.

என் பள்ளிக்கூட நண்பர்கள் இருவர் படத்தை தயாரிச்சிருக்காங்க. ஆனா  முதல் படத் தயாரிப்பாளருக்கு இங்க இருக்கிற சில ரகசிய அறைகள் திறக்காது. அதனால நான் தொழில் கற்ற குரு, ஷங்கர் சார்கிட்ட உதவி கேட்டேன்.  அவருக்கு படம் பிடிச்சிருந்தது. அவரே வெளியிடுறாரு” என்றார் வசந்தபாலன்.

- Advertisement -

Read more

Local News