Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

உ’லோ’கநாயகன்: கமலின் சோக ரகசியம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் இரு தலைமுறைகளாக கோலோச்சுபவர் கமல்.  களத்தூர் கண்ணம்மா படத்தில் துவங்கிய இவரது திரைப்பயணம், இப்போதும் வெற்றிகரமாக தொடர்கிறது. நடிப்புக்காக, இவர் செய்த ரிஸ்குகள் அதிகம். அந்த அளவுக்கு உடம்பை வருத்தி நடிப்பார்.

இந்த நிலையில்  பத்திரிகையாளர் அந்தனன் ஒரு பேட்டியில் கமலைப் பற்றி ஒரு தகவலை கூறினார்.

அவர், “எனது நண்பர் ஒரு நாள் கமலை பார்க்க சென்றார்.  அப்போது அவரிடம் கமல், ‘என்னை எல்லோரும் உலக நாயகன் என்கிறார்கள். ஆனால் நான் உலோக நாயகன்.. உடம்பில் ஏகப்பட்ட இடங்களில் ப்ளேட் போட்டு ஃபிட் செய்து வைத்திருக்கிறார்கள் என சொன்னார் கமல்” என்று கூறினார் அந்தணன்.

மேலும் அவர், “சமீபத்தில் கூட  விபத்து ஏற்பட்டு  அவரது வலது காலில் ப்ளேட் வைத்தார்கள். காரணம் கமல் சண்டைக்காட்சிகளை விரும்பி செய்யக்கூடிய நடிகர். தவிர, டூப் போட அதிகம் விரும்பமாட்டார். இப்படி ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது பல முறை விபத்து  நடந்து எலும்பு முறிவு நடந்திருக்கிறது” என்றார் அந்தணன்.

- Advertisement -

Read more

Local News