சத்யராஜ் – கவுண்டமணி காம்பினேஷன் என்றாலே படம் ஹிட் என்று அர்த்தம். இவர்களது காமெடி காட்சிகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இருவரும் தனிப்பட்ட முறையிலும் நெருங்கிய நண்பர்கள்.
இது குறித்து சத்யராஜ் கூறும்போது, “
ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது உதவி இயக்குனரை அழைத்த சத்யராஜ் “இன்னும் எத்தனை நாள் இந்த பாடல் காட்சியை படமாக்கப்போகிறீர்கள்?” என கேட்டேன். அதற்கு அந்த உதவி இயக்குனர் “இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் சார்” என்றார்.
நான், “இயக்குனர் கிட்ட சொல்லி நாளைக்குள் இந்த பாடல் காட்சியை முடித்துவிடச்சொல்” என சத்யாராஜ் கூறினாராம்.
“சரி” என்று தலையாட்டிய உதவி இயக்குனர், சத்யராஜ் கூறிய விஷயத்தை இயக்குனரிடம் கூறப் போனார்.
அந்த உதவி இயக்குனரை தடுத்து நிறுத்திய கவுண்டமணி “தம்பி, இவர் சொன்னார்ல. அந்த விஷயத்தை எதுவும் இயக்குனரிடம் சொல்லாதே” என கூறி அனுப்பி விட்டாராம்.
“ஏன் இப்படிச் சொன்னீர்கள்” என கவுண்டமணியிடம் கேட்டேன்.
அதற்கு அவர், “இந்தப் படத்தைவிட்டா உனக்கும் வேற படம் இல்ல.. எனக்கும் வேற படம் இல்ல.. அடுத்த படம் வர்றவரைக்கும் இதவச்சி ஓட்டுவோமே.. ஏன் நீயா கெடுத்துக்கிற” என்று கலாய்த்தார்” என சிரித்தபடியே கூறினார் சத்யராஜ்.