சிங்கப்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய சரோஜா தேவி பழைய சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்.
“ நானும், சிவாஜி கணேசனும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறோம். அந்த படங்களில் என் நடிப்பு சிறப்பாக இருந்தது என்றால் அதற்கு காரணம் நடிகர் திலகம் தான்.
இருவர் உள்ளம் படத்தில் அவர் ஒரு ப்ளே பாயாக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் என்னை பார்த்து, ‘எனக்கென்ன படிப்பில்லையா? பணமில்லையா, அழகில்லையா நீ ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற’ என்று கேட்பார். அவர் கேட்ட அந்த ஸ்டைலில் மயங்கி நான் என் டைலாக்கை மறந்துவிட்டேன். அதன் பிறகு ஒரு ரீடேக் ஆச்சு, அடுத்து 2-வது ரீடேக் ஆனதும் நான் அழ ஆரம்பித்துவிட்டேன். நான் அழுதா நிறுத்த மாட்டேன் என்று நடிகர் திலகத்திற்கு தெரியும்.
அதனால் அவர், ‘சரோஜா நல்லதான் நடிச்சா! நீதான் சரியா படம் பிடிக்கல’ என்று கேமரா மேனையைம் லைட் மேனையும் சத்தம்போட்டார். அதன்பிறகு என்னை தேற்றி மீண்டும் ஒரு டேக் எடுத்தார்கள்” என்றார் சரோஜாதேவி.