Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

கார்திக்குக்கு கட் அவுட் வைத்த இன்னொரு நடிகர் யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கார்த்திக்குக்கு, தான் கட் அவுட் வைத்த சம்பவத்தை நடிகர் சரத்குமார், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துகொண்டார்:

“நடிப்பு ஆர்வத்தில் இரண்டு படங்களில் தோன்றினேன். அடுத்து படம் தயாரிக்கும் ஆர்வம் வந்தது. மறைந்த கவிஞர் கண்ணதாசனின் மகனான கலைவாணன் கண்ணதாசன் என் நண்பர். இருவரும் சேர்ந்து களத்தில் இறங்கினோம்.

அப்படி உருவானதுதான் கண் சிமிட்டும் நேரம் திரைப்படம். 1988 இல் வெளிவந்தது. கலைவாணன் கண்ணதாசன் இயக்க, கார்த்திக் – அம்பிகா ஜோடியாக நடித்தனர். நான் போலீஸ் அதிகாரியாக நடித்தேன்.

இந்தப் படத்தை பிரமோட் செய்ய, தயாரிப்பாளர் என்ற முறையில் சென்னையில் கார்த்திக்குக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைத்தேன்” என்று சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார் சரத்குமார்.

 

- Advertisement -

Read more

Local News