தமிழ் திரையுலகில் ஏராளமான குடும்ப கதைகள் வந்திருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்டு தனித்துவமாக வெளியான திரைப்படம், ‘சம்சாரம் அது மின்சாரம்’. விசு இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்த படம். மேலும், லட்சுமி, ரகுவரன், மனோரமா என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தின் வெற்றிக்கும் மிகப்பெரிய பலமாக அமைந்ததே படத்தின் க்ளைமாக்ஸ் தான். பொதுவாக, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் சரியானால், மீண்டும் அந்த உறவுகள் இணக்கமாகி விடும். ஆனால் இந்தப் படத்தில் சற்று வித்தியாசமாக சினிமாத்தனமாக இல்லாமல் இயல்பானதாக நடைமுறைக்குப் பொருந்தி வருவதாக க்ளைமாக்ஸை வடிவமைத்திருப்பார் விசு.
அதாவது பிரச்சினைகள் எல்லாம் சரியானாலும், விசுவின் மகன் ரகுவரனும் அவரது மனைவி லட்சுமியும் தனிக் குடித்தனம் சென்று விடுவார்கள்.
படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் சார்பில், கிளைமாக்ஸ் சரியில்லை மாற்ற வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் விசு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இது குறித்து ஏவிஎம் சரவணன் கூறும்போது, “படத்தின் ரிசல்ட்டைப் பார்த்து நாங்கள் ஷாக் ஆகிவிட்டோம். மக்கள் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார்கள்” என்றார்.