Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

நடிகை சமந்தா நடிக்கும் புதிய தமிழ்ப் படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Dream warrior Pictures  நிறுவனம்,  தமிழ் திரையுலகில் மாறுபட்ட  தரமான படைப்புகளை வழங்கி வரும் மதிப்புமிகு நிறுவனம்.  

‘ஜோக்கர்’,  ‘அருவி’ என மாறுப்பட்ட படைப்புகள் ஒரு புறம்,  ‘காஷ்மோரா’, ‘கைதி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘NGK’ என கமர்ஷியல் கொண்டாட்டம் தரும் பல படங்களை தயாரித்து, தமிழ்த் திரையுலகில் அனைவராலும் பாராட்டு பெற்று வருகிறது.

இப்போது Dream warrior Pictures நிறுவனம் தனது புதிய தயாரிப்பினை அறிவித்துள்ளது. ரொமான்டிக் ஃபேண்டஸி வகையில் உருவாகவுள்ள இந்தப் புதிய படத்தை அறிமுக இயக்குநரான சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார்.

இவர் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசனிடமும், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடமும் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

தமிழில் ஒரு புது முயற்சியாக, ஃபேண்டஸி ரொமாண்டிக் படமாக, பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் இப்படம் உருவாகிறது.

Dream warrior Pictures நிறுவனத் தயாரிப்பில் நடிகை சமந்தா நடிப்பது இதுவே முதல் முறை. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

- Advertisement -

Read more

Local News