ஒரு விழாவில் பேசிய பட்டிமன்றம் திண்டுக்கல் லியோனி, விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ.சி. தன்னிடம் வைத்த வேண்டுகோள் குறித்து சுவாரஸ்யமான சம்பவத்தைக் கூறினார்.
அவர், “விஜயகாந்த் – விஜய் நடித்த ‘செந்தூரப்பாண்டி படத்தின் 100வது நாள் விழாவில் எஸ்.ஏ.சி என்னை வைத்து ஒரு பட்டி மன்றம் நடத்தினார். ‘செந்தூரப்பாண்டி படத்தின் வெற்றிக்கு காரணம் காதலா? வீரமா?’ என்பதுதான் தலைப்பு.
பட்டிமன்றம் துவங்குவதற்கு முன்பு என்னிடம் வந்த எஸ்.ஏ.சி ‘வீரம் என நீங்கள் தீர்ப்பு சொன்னால் என் மகன் விஜய் ஃபீல் பண்ணுவான்.. காதல் எனவும் சொல்ல வேண்டாம். ஏனெனில், விஜயகாந்த் எனக்காக இப்படத்தில் நடித்து கொடுத்துள்ளார். எனவே, இரண்டையும் மிக்ஸ் பன்ணி ஒரு தீர்ப்பு சொல்லுங்க’ என கேட்டார். அவர் சொன்னது மாதிரியே தீர்ப்பை சொல்லிவிட்டேன்’ என லியோனி கூறினார்.