Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’.

K9 Studios’ மற்றும் ‘நீலம் புரடொக்‌ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

வட சென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச் சண்டையை மையமாக வைத்து முழுக்க, முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே. படத் தொகுப்பினை செய்திருக்கிறார். படத்தின் முக்கிய பலமே சண்டைக் காட்சிகள்தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.

படப்படிப்பு ஆரம்பித்த நாளிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இத்திரைப்படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. படம் 2021 மார்ச் இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News