Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் சென்ற ஆண்டு கொரோனா நோய்க்குப் பலியான பிரபல திரைப்படப் பின்னணி பாடகரும், இசையமைப்பாளரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பத்ம விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படுவது வழக்கம்.

அதுபோல் இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷன் விருது 7 பேருக்கும், பத்ம பூஷன் 10 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் 102 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து வெகு சிலருக்கே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மறைந்த பின்னணிப் பாடகரும், நடிகரும், இசையமைப்பாளருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷன் விருதுகளில் ஒன்றுகூட தமிழ்நாட்டிற்கு இல்லை.

பத்மஸ்ரீ விருதுகளில்

விளையாட்டு வீராங்கனை பி.அனிதா

வில்லிசைக் கவிஞர் சுப்பு ஆறுமுகம்

பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா

கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ

விவசாயத் துறையில் இருக்கும் பாப்பம்மாள்

கே.சி.சிவசங்கர்

சமூக சேவகர் மராச்சி சுப்புராமன்

தொழிலதிபர் பி.சுப்ரமணியன்

மருத்துவர் திருவேங்கடம்

தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு

ஆகிய 10 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கும், கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைக்குத்தான் அதிகமாக பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை விருதுக்குத் தேர்வானவர்களின் பட்டியல் பல்வேறு துறைகளிலும் கலந்து கட்டி தேர்வு செய்திருக்கிறார்கள்.

விருது பெறும் கலைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் நமது வாழ்த்துகள்..!

- Advertisement -

Read more

Local News