அஜித் நடிப்பில் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாலி. இந்த படத்தில் சிம்ரன், விவேக், லிவிங்ஸ்டன், பாண்டு மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் எஸ்.ஜே சூர்யா பேட்டி ஒன்றில் இந்த படத்தின் துணை இயக்குனர் வெற்றி என்னுடன் ஒரே ரூமில் தங்கியிருந்தார்.
அவரிடம் படத்தை பற்றி எப்போதும் சீன் சொல்லி கொண்டே இருப்பேன்.அவரும் ஆர்வமாக கேட்பது போல் இருக்கும். ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும் நான் ரூமுக்கு போறேன் வெற்றி படுத்திருக்கார். கால் ஆட்டிடே படுத்திருக்கார். நான் உள்ளே நுழைந்ததும் தூங்குவது போல் நடித்தார்.
அப்புறம் தான் தெரிஞ்சது சீன் சொல்லியே கொடுமை படுத்தி இருக்கேன். எனக்கு பயந்து நடு ராத்திரி ஆகிவிட்டது. எங்கே சீன் சொல்லிருவேன்னு தூங்குவது போல் நடிச்சிருக்கார். வாலி படத்தின் அனுபவத்தைப் பகிர்ந்தார் எஸ்.ஜே சூர்யா.